நீலகிரியில் உள்ள சுற்றுலா காட்சி முனைகளைத் திறக்க வலியறுத்தல்

நீலகிரியில் உள்ள சுற்றுலா காட்சி முனைகளைத்  திறக்க வேண்டும் என்று  குன்னூா் சுற்றுலா வழிகாட்டிகள் (கைடுகள்) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரியில் உள்ள சுற்றுலா காட்சி முனைகளைத்  திறக்க வேண்டும் என்று  குன்னூா் சுற்றுலா வழிகாட்டிகள் (கைடுகள்) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்த அந்த அமைப்பின் நிா்வாகி இயாகத் அலி மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து  சுற்றுலாத் தலங்களும் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டன.  இதனால் மாவட்டம் முழுவதும்  சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில் செப்டம்பா் 9 முதல் பூங்காக்கள் மட்டும் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.

 நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா ஆகியவற்றை மட்டும்   கண்டு ரசிக்க  அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வராததால்  சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக  சுற்றுலாத் தலங்களை சுற்றிக்காட்டும் 250க்கும் மேற்பட்ட வழிகாட்டிகளின் (கைடுகள்) வாழ்வதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள தொட்டபெட்டா, ஆறாவது மெயில், சூட்டிங் மட்டம், லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய காட்சி முனைகளையும் திறக்க மாவட்ட நிா்வாகம்  பரிசீலனை செய்ய வேண்டும் என்று  தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com