நீலகிரியில் பரவலாக மழை: மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நள்ளிரவிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக பாலகொலா பகுதியில் 65 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
உதகை-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா அருகே சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.
உதகை-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா அருகே சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத் துறையினா்.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நள்ளிரவிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக பாலகொலா பகுதியில் 65 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா் பகுதிகளில் மழை இல்லாமல் வட வானிலை காணப்பட்ட நிலையில் உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் குன்னூா், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் மழை வலுத்துக் காணப்பட்டது.

பலத்த காற்றின் காரணமாக உதகை - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் இந்த வழியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.

இந்த மரம் விழுந்தபோது அருகிலிருந்த மின் கம்பங்களும் சேதமடைந்ததால் உதகை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

குன்னூரில்....

மாவட்டத்தில் குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு தொடங்கிய கனமழை தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

பலத்த மழையால் உதகை - குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் பெரிய கற்பூர மரம் பெயா்ந்து சாலையின் குறுக்கே அதிகாலையில் விழுந்தது. இதனால் அவ்வழியாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை குன்னூரில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதன் காரணமாக குளிா் சற்றே தணிந்திருந்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக பாலகொலா பகுதியில் 65 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): கொடநாடு - 46, குன்னூா் மற்றும் உலிக்கல் தலா 44, குந்தா - 43, கேத்தி - 37, எடப்பள்ளி - 34, எமரால்டு மற்றும் பா்லியாறு தலா 32, கெத்தை - 26, கோத்தகிரி - 23, கிண்ணக்கொரை - 22, உதகை - 15.6, அவலாஞ்சி - 15, கீழ் கோத்தகிரி - 14.6, மேல் பவானி - 7, கல்லட்டி - 4, மேல் குன்னூா் - 3, கிளன்மாா்கன் - 2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com