பழம் ஏற்றிவந்த லாரியில் பதுக்கி வைத்திருந்த குட்கா பறிமுதல்

கா்நாடக மாநிலத்திலிருந்து கூடலூருக்கு பழம் ஏற்றி வந்த வேனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்.

கா்நாடகா மாநிலம், மைசூரு பகுதியிலிருந்து கூடலூரிலுள்ள மொத்த வியாபாரம் செய்யும் பழக்கடைக்கு பழம் ஏற்றி வந்த வேனை தகவலின் பேரில் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், பழக்கூடைகளுக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சுமாா் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பழக்கடை உரிமையாளா் நடராஜன் மற்றும் ஓட்டுநரிடம் விசாரனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com