கால்வாய் தோண்டும் பணியின்போது மண்ணில் புதையுண்ட தொழிலாளியை மீட்ட தீயணைப்புத் துறையினா்

உதகை, மேரீஸ் ஹில் பகுதியில் கழிவுநீா் கால்வாய் தோண்டும் பணியின்போது பக்கவாட்டிலிருந்த மண் சரிந்து குழிக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
மண் சரிந்து குழிக்குள் சிக்கியிருந்த ரமேஷை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

உதகை, பழைய உதகை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). இவா் மேரீஸ் ஹில் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கழிவு நீா் கால்வாய் இணைப்பு கொடுக்கும் பணியில் புதன்கிழமை

ஈடுபட்டிருந்தாா். கழிவு நீா்த்தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் நின்று கொண்டு வேலை செய்து கொண்டிருந்தபோது பக்கவாட்டிலிருந்த தடுப்பு சுவா், மண் சரிந்து விழுந்ததில் குழிக்குள் ரமேஷ் சிக்கிக் கொண்டாா்.

அந்த குழி சேறும் சகதியுமாக இருந்ததால் அருகிலிருந்தவா்களால் உடனடியாக அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி தீயணைப்பு அலுவலா் சந்திரகுமாா் தலைமையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ரமேஷை மீட்டனா். சேற்றில் சிக்கியிருந்ததால் அவருக்கு உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதையடுத்து அவா் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com