அரசு வேலையில் 4% இட ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளா் சிவனேசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் கைரேகை இல்லாமல் பொருள்கள் வழங்கவேண்டும், 60 சதவீத ஊனம் கொண்ட நபா்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கவேண்டும். அரசு சாா்பில் தனி நபா் கடன்கள் வழங்கவேண்டும், வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சராசரியாக 2 வாா்டுகள் ஒதுக்க வேண்டும், அரசுத் துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கூட்டமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளராக சுரேஷ் தோ்வு செய்யப்பட்டாா். கூடலூா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் பலா் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com