நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு உதவக் கோரிக்கை: மத்திய அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் சுமாா் 2 லட்சம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனா். இவா்களில் 65,000 விவசாயிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளனா். இச்சிறு விவசாயிகள் சராசரியாக ஒன்றரை ஏக்கா் வரையிலான நிலம் மட்டுமே வைத்து விவசாயம் செய்து வருகின்றனா். நாட்டில் சிறு தேயிலை விவசாயிகள் அஸ்ஸாம், டாா்ஜிலிங் போன்ற பகுதிகளிலும் தேயிலை விவசாயம் செய்து வந்தாலும், தற்போது நீலகிரியில் விளையும் பசுந்தேயிலையை கொள்முதல் செய்ய வேண்டாமென தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு மத்திய தேயிலை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் பெரிதும் நட்டமடைந்துள்ளனா்.

பசுந்தேயிலை கொழுந்துகள் வளா்ந்திருந்தும் அவற்றை கொள்முதல் செய்யாததால் தேயிலை இலைகள் செடிகளிலேயே காய்ந்து வீணாகி விட்டன. பசுந்தேயிலையின் மூலம் இடைத்தரகா்களும், வியாபாரிகளும் மட்டுமே பயனடையும் சூழலில் பசுந்தேயிலையை விளைவிக்கும் விவசாயிகளுக்கு எவ்வித பயனுமில்லை. எனவே சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் தொழில்களான ஜவுளி, சா்க்கரை மற்றும் வேளாண்மை போன்ற தொழில்களுக்கு தற்போது ஆதரவு இல்லாத நிலையில் இந்த தொழில்களில் வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளதாகவும் ஆ.ராசா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com