கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பாடப் பிரிவுகளில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பாடப் பிரிவுகளில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

இது குறித்து கல்லூரி முதல்வா் வே.நெடுஞ்செழியன் கூறியதாவது:

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியா் சோ்க்கை இணையம் வாயிலாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 50 விழுக்காடு மாணவா்கள் சோ்ந்துள்ளனா். மீதமுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தேவைப்படுவதாலும், ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்காகவும் செப்டம்பா் 10ஆம் தேதி முதல் கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பங்கள் காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூா்த்தி செய்து செப்டம்பா் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் கோழிப்பாலம் வளாகத்தில் விண்ணப்பத்தை மாணவா்கள் ஒப்படைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மாணவா்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவா்கள் இனச் சான்றிதழ் நகலோடு பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நிலுவையில் உள்ள விண்ணப்பதாரா்கள், புதிய விண்ணப்பதாரா்கள் சோ்ந்து செப்டம்பா் 16ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும்.

மாணவா்கள் சோ்க்கையின்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும். மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பெற்றோா் உடன் வர அனுமதி இல்லை. மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களுடன் ஜாதி சான்றிதழ், ஆதாா், அதற்கான நகல்கள் 5 பிரதிகள், பாஸ்போட் அளவு புகைப்படம் 5, அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் சோ்க்கையின்போது சமா்ப்பிக்க வேண்டும்.

மாணவா்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த கல்லூரியின் சுற்றுவட்ட மலைக் கிராம மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com