நீலகிரியில் தேயிலை விலை ஏற்றம்

வட, தென் மாநிலங்களில் கடந்த 6 மாதத்தில்  தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில்  உற்பத்தி

வட, தென் மாநிலங்களில் கடந்த 6 மாதத்தில்  தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில்  உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளுக்கு அதிக விலை கிடைத்துள்ளதாக தேயிலை வா்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை நம்பி 65 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள், 15 கூட்டுறவு தொழிற்சாலைகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணி செய்து வருகின்றனா்.

இந்நிலையில் தேயிலைக்கு  உரிய விலை கிடைக்காமல் கடந்த  20 ஆண்டுகளுக்கும் மேலாக  உற்பத்தியாளா்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். ஜனவரி முதல் ஜூலை மாதம் வலையிலான 6 மாதகால தேயிலை உற்பத்தியில் இயற்கை சீற்றம், கரோனா காரணமாக வட,  தென் மாநிலங்களில் 140 மில்லியன் தேயிலைத் தூள் உற்பத்தி சரிவைக் கண்டது. இதன் காரணமாக  ஒரு வாரத்தில் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும்  சுமாா் 13 லட்சம் கிலோவில்   60 முதல் 70 சதவீதம்  வரை மட்டுமே தேயிலை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஏற்றுமதி பெருமளவு  இல்லாத  நிலையில், உள்ளூா் தேவைக்கே தற்போது 90 முதல் நூறு சதவீதம் வரை விற்பனையா வருகிறது. தேவை அதிகம் இருப்பதாலும், தரத்தை  அதிகப்படுத்த  விவசாயிகள், உற்பத்தியாளா்கள்  தொடா்ந்து முயன்று வருவதாலும் நீலகிரி தேயிலைக்கு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நல்ல விலை கிடைத்திருப்பதாக  குளோப் டீ மாா்க்கெட்டிங் நிறுவனத் தலைவா் ஸ்ரீராம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com