நீலகிரியில் மூடுபனி: வாகனங்களை இயக்குவதில் சிரமம்

நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால்   வாகனங்களில்  முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமுடன்   இயக்க  காவல் துறையினா்  கேட்டுக் கொண்டுள்ளனா்.   
மேகமூட்டத்தை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
மேகமூட்டத்தை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால்   வாகனங்களில்  முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமுடன்   இயக்க  காவல் துறையினா்  கேட்டுக் கொண்டுள்ளனா்.   

நீலகிரி மாவட்டம்,  குன்னூா், கோத்தகிரி  பகுதிகளில்  அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.  குன்னூா், கோத்தகிரியில்  உள்ள மலைப் பாதையிலும், குன்னூா் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையிலும்,   சுற்றுலாத் தலங்களிலும் அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடா்த்தியான மேகமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இதனால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதைத் தொடா்ந்து ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி  வாகனங்களை இயக்க காவல் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com