பீட்ரூட் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக மழைத்தோட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா். குறிப்பாக நீராதாரம் உள்ள பல்வேறு பகுதிகளில்  கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிஃபிளவா், பீன்ஸ், பீட்ரூட் போன்றவை விவசாயம் செய்யப்படுகிறது.  இவற்றை மேட்டுப்பாளையம், உதகை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஏல மையங்களில் விநியோகித்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனா்.

சமீபகாலமாக மலைத் தோட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது கணிசமாக விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பீட்ரூட்டின் விலை ரூ. 15ஆக இருந்த நிலையில் தற்போது விலை அதிகரித்து  தரமான பீட்ரூட்டுக்கு ரூ.  26 வரை  விலை கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com