மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில்பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள்

நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் ஸ்பேத்தோடியா எனும் சேவல் கொண்டை மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள். ~குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள்.
மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள். ~குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துக் குலுங்கும் சேவல் கொண்டை மலா்கள்.

குன்னூா்: நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம் - குன்னூா் சாலையில் ஸ்பேத்தோடியா எனும் சேவல் கொண்டை மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், சுற்றுப்புறங்களிலும், மலைகளுக்கு இடையேயும் பூத்துக் குலுங்கும் ஸ்பேத்தோடியா எனும் சேவல் கொண்டை மலா்களின் சீசன் தற்போது களைகட்டியுள்ளது.

இந்த மலா்கள் நீலகிரியின் இரண்டாம் சீசன் காலமான செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் மிக அதிக அளவில் பூத்துக் குலுங்கும். சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாய் மலா்ந்துள்ள இந்த மலா்களால் குன்னூா் மலைப் பாதை சிவப்புக் கம்பளம் விரித்ததுபோலக் காட்சியளிக்கிறது. மேலும், ஐரோப்பிய கண்டத்தைப் பூா்வீகமாகக் கொண்ட இவ்வகைப் பூக்கள் ஆங்கிலேயா் காலத்தில் குன்னூரில் அதிக அளவில் நடவு செய்யப்பட்டன. இரண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த மலா்கள் சாலை ஓரத்தில் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.n

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com