நீலகிரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th September 2020 10:27 PM | Last Updated : 27th September 2020 10:27 PM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் இல்லாமல் ஒரே நாளில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகபட்சமாக 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கரோனாவில் இருந்து குணமடைந்த 115 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் 917 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 3,807ஆக அதிகரித்துள்ளது.