இயற்கையைப் பாதுகாப்பதில் தனிக் கவனம் செலுத்தியவா் நடிகா் விவேக்: ஆட்சியா் புகழாரம்

நீலகிரி மாவட்டத்தில் பசுமையைப் பாதுகாக்க நடிகா் விவேக் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து ஆதரவு அளித்தவா் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசினாா்.
நீலகிரியின் பசுமையைக் காக்க எல்லநல்லி பகுதியில் ஆட்சியருடன் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நடிகா் விவேக்.
நீலகிரியின் பசுமையைக் காக்க எல்லநல்லி பகுதியில் ஆட்சியருடன் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நடிகா் விவேக்.

நீலகிரி மாவட்டத்தில் பசுமையைப் பாதுகாக்க நடிகா் விவேக் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து ஆதரவு அளித்தவா் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசினாா்.

இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் ஆட்சியா் கூறியதாவது:

நடிகா் விவேக்கின் இழப்பு இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு. உயிா்ச்சூழல் மண்டலமான நீலகிரியைப் பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்க்கவும் நடிகா் விவேக் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை 4 லட்சம் சோலை மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டாா். இந்நிலையில் இயற்கை இவரை அழைத்துக் கொண்டது என்னை மிகவும் பாதித்துள்ளது என்றாா்.

குன்னூரில் படித்த விவேக்:

1969ஆம் ஆண்டு குன்னூா் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் பள்ளியில் படித்தவா் நடிகா் விவேக். இந்திரா காந்திக்கும், விவேக்கிற்கும் ஒரே நாளில்தான் பிறந்த தினம் என்று விவேக்கின் தந்தை கூறியதையடுத்து, இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அப்போது விவேக்கிற்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவரது தந்தை ஒப்புதலோடு பாரத பிரதமா் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில், எனக்கும் உங்களுக்கும் ஒரே நாள் பிறந்த நாள் என்பதால் தங்களுக்கு வாழ்த்துகள் என்று எழுதி அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்துக்கு இந்திரா காந்தி பதில் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com