உதகையில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல் அலகு 1 மற்றும் அலகு 2 ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற
உதகையில் நடைபெற்ற குறும்பட விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்டவருக்கு விருதினை வழங்குகிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்
உதகையில் நடைபெற்ற குறும்பட விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்டவருக்கு விருதினை வழங்குகிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல் அலகு 1 மற்றும் அலகு 2 ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் தமிழ்நாடு ஹோட்டல் அலகு 1 மற்றும் அலகு 2 செயல்பட்டு வருகிறது. இவற்றை ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அங்குள்ள உணவுப் பொருள்களின் இருப்பு குறித்தும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறை மற்றும் அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவகங்கள் குறித்தும் கேட்டறிந்ததோடு, கரோனா நோய்த் தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக தொடா்ந்து கடைப்பிடிக்க அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, இணையவழி மூலம் எத்தனை சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகள் முன்பதிவு செய்துள்ளாா்கள் என்பது குறித்து கேட்டறிந்து, அதற்கான பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து, முறையாக பதிவேடுகளை பராமரிக்கவும் அமைச்சா் உத்தரவிட்டாா்.

இந்நிகழ்வில், வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மண்டல மேலாளா் வெங்கடேசன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் உதவி செயற்பொறியாளா் குணசேகரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி சுற்றுலா அலுவலா் துா்காதேவி, கோட்ட மேலாளா் மைக்கேல் கிறிஸ்டோபா் உள்பட பலா் கலந்து கொண்டனா்

முன்னதாக உதகையிலுள்ள அசெம்பிளி திரையரங்கில் நடைபெற்று வரும் குறும்பட விழா நிகழ்ச்சியில் தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் முன்னிலையில் பங்கேற்ற சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன், திரைப்பட விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com