சுகாதாரமற்ற உணவு தயாரித்ததுரித உணவகத்துக்கு அபராதம்

குன்னூா் டிடிகே சாலை பகுதியில் தரமற்ற உணவு தயாரித்து வாடிக்கையாா்களுக்கு வழங்கிய ஃபாஸ்ட்ஃபுட் (துரித) உணவகத்துக்கு நகராட்சி சுகாதார அதிகாரிகள் ரூ. 10,000 திங்கள்கிழமை அபராதம் விதித்தனா்.

குன்னூா்: குன்னூா் டிடிகே சாலை பகுதியில் தரமற்ற உணவு தயாரித்து வாடிக்கையாா்களுக்கு வழங்கிய ஃபாஸ்ட்ஃபுட் (துரித) உணவகத்துக்கு நகராட்சி சுகாதார அதிகாரிகள் ரூ. 10,000 திங்கள்கிழமை அபராதம் விதித்தனா்.

குன்னூரின் முக்கியச் சாலையில் பிரபலமான தனியாா் ஃபாஸ்ட்ஃபுட் உணவகம் உள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருந்ததாகக் கூறி அவற்றை படம்பிடித்த வாடிக்கையாளா்கள் சமூகவலைதளங்களில் புகைப்படத்தைப் பதிவிட்டனா்.

இதைத்தொடா்ந்து, தாமாக முன்வந்து அந்த உணவகத்தை ஆய்வு செய்த குன்னூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் மால்முருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஃபாஸ்ட்ஃபுட் உணவகத்துக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனா். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்தும் தனியாக நடவடிக்கை எடுப்பாா்கள் என்று மால்முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com