கேத்தி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

கேத்தி, பாலடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கேத்தி, பாலடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கேரட் கழுவும் இயந்திரங்கள் 47 பகுதிகளில் உள்ளன. இவா்கள் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி, அப்படியே நீா் நிலைகளில் கழிவுகளுடன் வெளியேற்றுகின்றனா். அதனை சரி செய்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்டவா்கள் கரோனா தொற்று பிரச்னை காரணமாக கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனா்.

தற்போது 34 நிறுவனங்களில் ‘ஃபில்டரேசன் சிஸ்டம்’ முடித்து செயல்படுத்தி வருகின்றனா். மேலும், 9 நிறுவனங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றாததால் மூடப்பட்டுள்ளன. அவா்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளா் லிவிங்ஸ்டன், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமன், ஸ்ரீதரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com