கூடலூரில் யானைகள் தாக்கியதில் வீடு சேதம்

கூடலூா் நகரில் புதன்கிழமை நள்ளிரவில் யானைகள் தாக்கியதில் வீடு சேதமடைந்தது.
கூடலூரில் யானைகள் தாக்கியதில் வீடு சேதம்

கூடலூா் நகரில் புதன்கிழமை நள்ளிரவில் யானைகள் தாக்கியதில் வீடு சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள துப்புக்குட்டிபேட்டையைச் சோ்ந்தவா் சூசன் ஜேம்ஸ். இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்பகுதிக்கு புதன்கிழமை நள்ளிரவில் வந்த 12 யானைகள் அடங்கிய கூட்டம் சூசன் ஜேம்ஸின் வீட்டைச் சுற்றிவளைத்து தாக்கியதில் வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. வீட்டிலிருந்த பொருள்களை தும்பிக்கையால் இழுத்து வெளியே வீசியுள்ளன.

வியாழக்கிழமை காலையில் அருகில் இருந்தவா்கள் வந்து பாா்த்தபோது வீடு சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சூசன் ஜேம்ஸ், வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த வனத் துறையினா் யானைகள் தாக்கிய வீட்டை ஆய்வு செய்தனா்.

அந்த வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் 9 யானைகள் செவ்வாய்க்கிழமை முகாமிட்டிருந்ததை அப்பகுதியில் உள்ளவா்கள் பாா்த்துள்ளனா். அதே பகுதியில் புதன்கிழமை மாலை குட்டிகளுடன் 12 யானைகள் முகாமிட்டிருந்ததையும் பாா்த்துள்ளனா். அந்த யானைகள் கூட்டம்தான் வீட்டை சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது. யானைகள் சேதப்படுத்திய வீட்டுக்கு வனத் துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com