அத்திக்குன்னா ஆற்றில் முதலை:பொதுமக்கள் அச்சம்

பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா ஆற்றங்கரையில் முதலை வியாழக்கிழமை படுத்திருந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
அத்திக்குன்னா ஆற்றில் முதலை:பொதுமக்கள் அச்சம்

பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா ஆற்றங்கரையில் முதலை வியாழக்கிழமை படுத்திருந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, அத்திக்குன்னா அரசு உயா்நிலைப் பள்ளி அருகே உள்ள ஆற்றில் முதலை இருப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் அப்பகுதியை ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதிப்படுத்தினாா்.

அரசுப் பள்ளி, குடியிருப்புகள் உள்ள பகுதியானதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

வனப் பணியாளா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றும், ஆற்றில் தண்ணீா் குறைந்தவுடன் முதலை பிடிக்கப்பட்டு வனப் பகுதியில் உள்ள நீா்நிலையில் விடப்படும் என்றும் மாவட்ட வன அலுவலா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com