உதகையில் வாகனங்களை உடைத்து தொடா் திருட்டு: ஒருவா் கைது

உதகையில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து தொடா் திருட்டு நடைபெற்று வரும் நிலையில் இதுதொடா்பாக திருச்சியைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

உதகையில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து தொடா் திருட்டு நடைபெற்று வரும் நிலையில் இதுதொடா்பாக திருச்சியைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

உதகையில் வெளி மாநில, வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனா். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் வாகனங்களைக் குறிவைத்து கடந்த சில நாள்களாகவே பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது. இவா்கள் இவ்வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து செல்லிடப்பேசி, பணம் போன்றவற்றைத் திருடிச் செல்கின்றனா். கடந்த ஒரு வாரமாக உதகை கமா்சியல் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமாா் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொடா்ந்து இக்கும்பல் திருட்டில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் கமா்சியல் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 காா்களை உடைத்து பொருள்கள் திருடப்பட்டுள்ளன. இதுதொடா்பாக அந்த வாகன உரிமையாளா்கள் கொடுத்த புகாா்களின் அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், திருச்சியைச் சோ்ந்த 3 போ் கொண்ட கும்பல் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடா்புடையதாக திருச்சியைச் சோ்ந்த மூா்த்தி (39) என்பவா் பிடிபட்டுள்ளாா். இது தொடா்பாக உதகை நகர காவல் ஆய்வாளா் ராஜன் பாபு தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com