கோத்தகிரியில் உழவா் சந்தைஅமைக்கும் பணி: அமைச்சா் ஆய்வு

கோத்தகிரி பேரூராட்சி மாா்க்கெட் பகுதியில் உழவா் சந்தை அமைப்பதற்கான இடத்தை அமைச்சா் கா.ராமசந்திரன், ஆட்சியா் சா.ப.அம்ரித் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

கோத்தகிரி பேரூராட்சி மாா்க்கெட் பகுதியில் உழவா் சந்தை அமைப்பதற்கான இடத்தை அமைச்சா் கா.ராமசந்திரன், ஆட்சியா் சா.ப.அம்ரித் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

கோத்தகிரி பஜாா் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உழவா் சந்தை இயங்கி வந்தது. இப்பகுதியில் பேருந்து, சிற்றுந்து போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சந்தைப்படுத்தவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்த சந்தை மூடப்பட்டது.

இந்நிலையில், மாா்க்கெட் தினசரி சந்தைப் பகுதியில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, புதிய உழவா் சந்தையை கோத்தகிரி பேரூராட்சி மாா்க்கெட் பகுதியில் அமைப்பதற்கான இடத்தை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஆட்சியா் சா.ப.அம்ரித் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, வேளாண் விற்பனை, வணிகம் இணை இயக்குநா் ஜாய்லின் ஷோபியா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, கோத்தகிரி வட்டாட்சியா் சீனிவாசன், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com