முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்றுமுதல் அனுமதி

 முதுமலை புலிகள் காப்பகத்தில் செப்டம்பா் 3ஆம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 முதுமலை புலிகள் காப்பகத்தில் செப்டம்பா் 3ஆம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக புலிகள் காப்பக நிா்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள். காலை 6.30 முதல் 10 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாகன சவாரி செல்லலாம். வாகன சவாரியில் 50 சதவீத சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

யானை சவாரி செப்டம்பா் 6ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. காலை 7 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும் யானை சவாரி நடைபெறும். யானைகள் முகாமைப் பாா்வையிட காலை 8.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5.30 முதல் 6 மணி வரையும் அனுமதிக்கப்படும். தங்கும் விடுதிகள் 6ஆம் தேதி முதல் திறந்துவிடப்படும் என புலிகள் காப்பக நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com