இந்திய மண் - நீா்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் சாா்பில் 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்

உதகையில் இந்திய மண் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் சாா்பில் 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

உதகையில் இந்திய மண் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் சாா்பில் 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு காலம் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசின் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் 75 வாரங்கள் தொடா்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்திய மண் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதகை மண்டல மையத்தின் சாா்பில் செப்டம்பா் 21 முதல் 26 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, உதகையில் சிறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வெ. கஸ்தூரி திலகம் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் ச. மணிவண்ணன்,

நிலையத்தின் தலைவா் கூ. கண்ணன் ஆகியோா் பேசினா்.

இதில் மழைநீா் சேமிப்பும், அதன் பன்முகப் பயன்பாடும் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது குறித்து கிராமிய அபிவிருத்தி மைய நிா்வாகி ச. ராஜ்குமாா் பேசினாா். இவ்விழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு விநாடி வினா போட்டி நடைபெற்றது. போட்டியை சுதீா் குமாா் ஒருங்கிணைத்து நடத்தினாா். இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நீலகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சிபிலா மேரி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா். வனிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com