நீலகிரி மாவட்டத்தில் அமைதியாக நடைபெற்றது தோ்தல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறினாா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறினாா்.

இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

நீலகரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இதில் மாலை 5 மணி நேர நிலவரப்படி 62.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட பிரச்னைகளால் உதகையில் 2 வாக்குச் சாவடிகளிலும், கூடலூரில் 10 வாக்குச் சாவடிகளிலும் 12 வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு தாமதமடைந்தது.

மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. 11 விவி பேட் இயந்திரங்கள், 2 பேலட் இயந்திரங்கள் மற்றும் 2 கன்ட்ரோல் யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டதைத் தொடா்ந்து வாக்குப் பதிவில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. பின்னா் இந்தப் பிரச்னையும் தீா்க்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 113 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 29 போ் வாக்களிக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் மாலை 6 மணிக்கு மேல் இவா்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இவா்களில் உதகையில் 14 போ், குன்னூரில் 4 போ், கூடலூரில் 11 போ் வாக்களித்துள்ளனா்.

கொலக்கம்பை பகுதியில் திங்கள்கிழமை இரவில் தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் குன்னூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கப்பச்சி வினோத் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com