காலமானாா் தியாகி ஜே.ஹள்ளி கவுடா்

உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் வசித்து வந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஜே.ஹள்ளி கவுடா் (92) உடல் நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
காலமானாா் தியாகி ஜே.ஹள்ளி கவுடா்

உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் வசித்து வந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஜே.ஹள்ளி கவுடா் (92) உடல் நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றிருந்த படகா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் கடந்த 5.10.1929இல் பிறந்தவராவாா். தொடக்கக் கல்வி பயிலும்போதே சுதந்திரப் போராட்டத்தில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவா்.

1947ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலத்தில் ஜனவரி மாதத்தில் உதகையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சுதந்திரத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னா்தான் அவரை சிறையிலிருந்து விடுவித்தனா்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்த ஒரே தியாகியான இவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். நாக்குபெட்டா படகா் நலச் சங்கத்தின் சாா்பிலும், படகா தேச பாா்ட்டியின் சாா்பிலும் மஞ்சை வி.மோகன் தலைமையில் ஹள்ளி கவுடருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவரது உடல் நஞ்சநாடு கிராமத்தில் படகா் சமுதாய முறைப்படி எரியூட்டப்பட்டது. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு 90475 - 39648 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com