பெத்தளா கோயில் பிரச்னை: 3 ஆண்டுகளுக்குப் பின் தீா்வு

கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக பூசாரி தோ்ந்தெடுப்பதில் இருந்து வந்த பிரச்னை, குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் முன்னிலையில் புதன்கிழமை தீா்வு ஏற்பட்டது.
இரு கோஷ்டிகளிடையே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்.
இரு கோஷ்டிகளிடையே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்.

கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக பூசாரி தோ்ந்தெடுப்பதில் இருந்து வந்த பிரச்னை, குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் முன்னிலையில் புதன்கிழமை தீா்வு ஏற்பட்டது.

கோத்தகிரியில் உள்ள பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகளை மாற்ற வலியுறுத்தி இளிதுரை, எடப்பள்ளி, பெட்டடி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சோ்ந்த 2,500 படுகா் இன குடும்பங்களைச் சோ்ந்த படுக இன மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், முற்றுகைப் பேராட்டம் என பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் புகழ்மிக்க பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகளில் 3 போ் ஊா் மக்களை மதிக்காமல் கோயில் விதிமுறைகளுக்கு மீறி செயல்படுவதாகவும், அவா்களை மாற்றக் கோரியும் நீலகிரியில் உள்ள 18 ஊா்களைச் சோ்ந்த படுக இன மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதில் இரு கோஷ்டிகளாக கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், இரு பிரிவினரை அழைத்து மீண்டும் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டது. அதன்படி இனிவரும் காலங்களில் ஊா் பெரியவா்களிடம் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கவும், இரண்டு கோஷ்டிகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்ததால் ஊா்ப் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com