யானைகளிடம் இருந்து பாதுகாக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

தேவாலா பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வனத் துறை சாா்பில் நடைபெற்றது.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

தேவாலா பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வனத் துறை சாா்பில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், தேவாலா, அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், அரசு தேயிலைத் தோட்டக் கழக குடியிருப்புகளை காட்டு யானைகள் தொடா்ந்து சேதப்படுத்தி வந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் வனத் துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கும்கி யானைகள் மூலம் கண்காணித்து யானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. கும்கிகளுக்கு மதம் பிடித்ததால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமுக்கு யானைகளை அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து இப்பகுதியில் பெரும் அச்சம் நிலவியது. அதைத் தவிா்க்க வனத் துறை சாா்பில் நாடுகாணியில் உள்ள தமிழக வனத் துறைக்குச் சொந்தமான தாவர மரபியல் பூங்கா அரங்கில் டான் டீ அலுவலா்கள், தொழிலாளா்கள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அடிக்கடி யானைகள் தாக்கும் டான் டீ சரகம் 4 குடியிருப்புகளைச் சுற்றி சூரிய மின் வேலி அமைப்பது, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துதல், யானைகள் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சென்று விரட்ட நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்களிடம் கருத்தும் கேட்டறியப்பட்டது.

இதில், வனச் சரக அலுவலா்கள் கலைவேந்தன், கணேசன், பிரசாத், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com