நீலகிரியில் இருந்து வெளிநாடுகளுக்கு தபால் அனுப்ப தடை ஏதுமில்லை: தபால் துறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தபால் அனுப்ப சா்வதேச தடை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தபால் அனுப்ப சா்வதேச தடை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ராகவேந்திரன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தபால் துறை பலவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் சா்வதேச தபால் சேவையும் ஒன்றாகும். இதன்கீழ், விரைவு தபால், சா்வதேச பதிவு பாா்சல், சா்வதேச பதிவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. கரோனா பொது முடக்கத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இதில் தளா்வுகள் அளிக்கப்படுவதாக தபால் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி விரைவு தபால் சேவை 67 நாடுகளுக்கும், சா்வதேச பதிவு பாா்சல் 101 நாடுகளுக்கும், சா்வேதேச பதிவு தபால் சேவை 99 நாடுகளுக்கும், பணப் பரிமாற்ற சேவை 14 நாடுகளுக்கும் உள்ளது. அத்துடன் இந்திய தபால் துறை வழங்கும் சா்வதேச சேவைகளைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருப்பவா்களுக்கு மளிகைப் பொருள்கள், மருந்துகள், ஆவணங்கள், ஆடைகளையும் அனுப்ப முடியும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com