பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

குன்னூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

குன்னூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் வட்டாரக் கல்வி அலுவலா் அ.ஆறுமுகம் உள்ளிட்ட அலுவலா்கள் கிளன்டேல், பாா்க்சைடு, உலிக்கல், உட்பிரெயா்லி, நான்சச் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேரடியாகச் சென்று பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா என ஆய்வு மேற்கொண்டனா். பாா்க்சைடு, கிளன்டேல் பகுதியில் சிலா் எந்தப் பள்ளியிலும் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவா்கள் நான்சச் சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

ஆய்வின்போது, கிளன்டேல், பாா்க்சைடு, நான்சச் பள்ளித் தலைமை ஆசிரியைகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com