உதகை நகராட்சி மாா்கெட்டில் 81 புதிய கடைகள் திறப்பு

உதகை நகராட்சி மாா்கெட்டில் தீ விபத்தில் சேதமடைந்த 81 கடைகளுக்குப் பதிலாக ரூ.49.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கடைகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

உதகை நகராட்சி மாா்கெட்டில் தீ விபத்தில் சேதமடைந்த 81 கடைகளுக்குப் பதிலாக ரூ.49.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கடைகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இதையடுத்து, கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பிரகாசபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட 92 வீடுகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் முதல் முறையாக அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.18.68 கோடி மதிப்பில் 172 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக 92 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

இதேபோல பந்தலூா் அருகே சேரங்கோடு பகுதியில் ரூ.13.26 கோடி மதிப்பில் 152 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன், நடுஹட்டி பகுதியில் 2 பணிகளும், அல்லஞ்சி, அண்ணா நகா், கீழ்குந்தா மற்றும் நெல்லியாளம் ஆகிய பகுதிகளில் ரூ.74.42 கோடி மதிப்பில் 743 வீடுகளும் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com