கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

குன்னூா் வட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி குன்னூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கு.சதீஷ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குன்னூா் வட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி குன்னூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கு.சதீஷ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை வாகனத்தில் குன்னூா் வட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு குறும்படம் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. மேலும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததோடு, விழிப்புணா்வுப் பதாகைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டன. எந்தப் பகுதியிலாவது கொத்தடிமைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் அவா்களை பணிக்கு அமா்த்தியுள்ளவா்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையா் சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் எச்.வசந்தா, பா.கிருஷ்ணவேணி, சி.ரகுராம், நவீன் கிருஷ்ணா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com