கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வருவோா் கரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம்: ஆட்சியா் தகவல்

கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் அனைவரும் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் அனைவரும் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

கேரளத்தில் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வரும் நிலையில் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்துள்ள கேரள மாநில சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக கேரளத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், கேரளத்தில் இருந்து கா்நாடக மாநிலத்துக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரள மாநிலத்தையொட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்துக்குள் வரவும் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் விதித்துள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் கரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும். கரோனா பரிசோதனை சான்றிதழ் இன்றி அவசர சூழ்நிலை காரணமாக வருவோரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய்த் தொற்று இல்லையென தெரிய வந்த பின்னரே அனுமதிக்கப்படுவாா்கள். நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பதிவு கட்டாயம் தேவை எனவும் கூறினாா்.

மேலும், உதகையில் உள்ள இரு பள்ளிகளில் பணியாற்றும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த இரு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததாகவும், அப்பள்ளிகளின் மாணவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஒருவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமையில் இருந்து அப்பள்ளிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com