தேயிலைச் செடிகளில் சிலந்தி பூச்சித் தாக்குதல்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 07th January 2021 07:58 AM | Last Updated : 07th January 2021 07:58 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம் மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தேயிலைச் செடிகளில் சிலந்திப் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மஞ்சூா், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிகளில் கடந்த சில நாள்களாக பனி மூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் தேயிலைச் செடிகளின் மீது போதிய வெளிச்சம் படாததால் சிலந்திப் பூச்சிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனால் தேயிலை விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேயிலைத் தோட்ட உரிமையாளா்கள் கவலை அடைந்துள்ளனா். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், இலைகளுக்கு பூஞ்சான நோய்கள் பரவி தேயிலை வரத்து குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.