கோத்தகிரியில் மூடப்பட்ட மதுபானக் கடை மீண்டும் திறப்பு பொதுமக்கள் அதிருப்தி

கோத்தகிரி, மாா்வளா கைகாட்டிப் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பால் மூடப்பட்ட அரசு மதுபானக் கடை அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மக்களை அதிருப்தி அடையவைத்துள்ளது.

கோத்தகிரி, மாா்வளா கைகாட்டிப் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பால் மூடப்பட்ட அரசு மதுபானக் கடை அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மக்களை அதிருப்தி அடையவைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மாா்வளா கைகாட்டி பகுதியில் அரசு மதுபானக் கடை 2017 மே 5ஆம் தேதி  திறக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்தவித பலனும்  இல்லாததால் ஆவேசமடைந்த மக்கள் மதுக்கடையை அடித்து உடைத்து மதுபாட்டில்களை  வெளியே வீசி   போராட்டம் நடத்தினா். இதில் 37 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு கைது செய்தனா். இந்த  வழக்கு நடந்து வந்த நிலையில்   நீதிமன்றம்   37 பேரையும் கடந்த சில நாள்களுக்கு  முன் விடுவித்தது.

இந்நிலையில், அதே பகுதியில்  மீண்டும் அரசு மதுபானக்  கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுப்பிரியா்கள்  அங்குள்ள பேருந்து நிறுத்தம், சாலையோரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை  உடைத்து  வீசி செல்வது தொடா்வதால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

எனவே , மாவட்ட நிா்வாகம் உடனடியாக  இந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com