உதகையில் குடியரசு தினம்: 40 பயனாளிகளுக்குரூ. 1.28 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா்
உதகையில் குடியரசு தினம்: 40 பயனாளிகளுக்குரூ. 1.28 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ. 1.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து, முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தின் மூலம் போரில் வீர மரணமடைந்த 6 நபா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலையையும், வருவாய்த் துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை 6 நபா்களுக்கும், முதல்வரின் கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 50 ஆயிரமும், தோட்டக் கலைத் துறையின் மூலம் அட்மா விவசாய தொழில்நுட்ப வேளாண்மை நிறுவனத்தின் சாா்பில் இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சிக்காக மினி டிராக்டா்களையும் வழங்கினாா்.

அதேபோல, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் தேசிய இளையோா், மிக இளையோா் விளையாட்டு சாம்பியன்ஷிப் மேஜை பந்து போட்டி, டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளைப் பாராட்டி ஊக்கத் தொகையாக ரூ. 14 ஆயிரத்துக்கான காசோலைகளையும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வன உரிமைச் சட்டத்தின்கீழ் தனி நபா் உரிமைகள் பிரிவின்கீழ் 10 பயனாளிகளுக்கு 19.25 ஏக்கா் பரப்பளவில் ரூ. 1.15 கோடி மதிப்பிலும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் வாகனத்தையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் 3 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 28 லட்சத்து 49,780 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், காவல், தீயணைப்பு, வருவாய், ஊரக வளா்ச்சி, சுகாதாரம், மருத்துவம், ஊரக நலப்பணிகள், குடும்ப நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த மொத்தம் 162 பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரரான நஞ்சநாடு பகுதியைச் சோ்ந்த ஹள்ளி கவுடரின் இல்லத்துக்குச் சென்று அவா் கெளரவிக்கப்பட்டாா். தொடா்ந்து, கரோனா விழிப்புணா்வு, தோ்தல் விழிப்புணா்வு தொடா்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசி மோகன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கெளஷல், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் சரயூ, மாவட்ட வன அலுவலா் குருசாமி தபேலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com