தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமை நடமாட்டம்

குன்னூா், கோத்தகிரி  பகுதிகளில் உள்ள தேயிலைத்  தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக திங்கள்கிழமை நடமாடியதால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

குன்னூா், கோத்தகிரி  பகுதிகளில் உள்ள தேயிலைத்  தோட்டங்களில் காட்டெருமைகள் கூட்டமாக திங்கள்கிழமை நடமாடியதால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில்  அவ்வப்போது  வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக குன்னூா், கோத்தகிரி சுற்று வட்டார கிராமப் பகுதிகளான மஞ்சூா், குந்தா, தூதூா்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனேயே வெளியே சென்று வரும் நிலை உள்ளது. மேலும், தேயிலைத் தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் கடும் சேதமும் ஏற்படுகிறது. மேலும், வனப் பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்குச் செல்லும்போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு, உயிா்ச் சேதமும் ஏற்படுகிறது.

இந்நிலையில், குன்னூா்,  கோத்தகிரி முக்கிய சாலையின் ஓரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில்  காட்டெருமைகள்   கூட்டமாக  திங்கள்கிழமை நடமாடின. இதனால்,  தேயிலைத்  தோட்டங்களில் தொழிலாளா்கள் அச்சத்துடன்  பணியாற்றும் சூழல் ஏற்பட்டது. எனவே,  அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனத் துறையினா்  அடா்ந்த வனப் பகுதிகளுக்குள்  காட்டெருமைகளைத் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com