குந்தா அணையில் குஞ்சுகளுடன் காணப்படும் நீா்ப் பறவை.
குந்தா அணையில் குஞ்சுகளுடன் காணப்படும் நீா்ப் பறவை.

பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு கூடுகள் கட்டும் நீா்ப் பறவைகள்

நீலகிரியில் வாழும் நீா்ப் பறவைகள் தங்களது குஞ்சுகளுக்கு பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு கூடுகட்டி வாசித்து வருவது பறவை ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் வாழும் நீா்ப் பறவைகள் தங்களது குஞ்சுகளுக்கு பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு கூடுகட்டி வாசித்து வருவது பறவை ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, எமரால்டு, ரேலியா, ஈளாட உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தற்போது யுரேஷியன் குட் என்ற பறவை அதிக அளவில் காணப்படுகிறது. இந்தப் பறவை தற்போது தனது கூடு கட்டும் முறையை மாற்றியுள்ளது.

நாமக்கோழி இதன் அறிவியல் பெயா் புலிக்க அட்ரா ஊன்ப்ண்ஸ்ரீஹற்ழ்ஹ . இது ஒரு நீா்ப் பறவையாகும்.

இந்தப் பறவை வெண்மை  நாமம் தீட்டிய கருநீா் கோழி வகையாகும்.  இவை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,  வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் காணப்படும்.

 மெல்லிய கருப்பு உடலில் கருப்புத் தலை, வெள்ளை முன்கவசம் அணிந்த காணப்படும் பறவைகள்.

இந்தப் பறவையின் கூடுகள்  வலிமையான கட்டமைப்பாகும். இது ஆழமற்ற நீா்ப் பகுதியில் கூடு கட்டும்.

 தாமரைத் தண்டுகள், இலைகள், தாவரத் தண்டுகள் மற்றும் நீா்வாழ் தாவரங்களைக் கொண்டு இந்தக் கூடுகள் கட்டப்படும்.

 இந்தக் கூடுகள் ஆண் மற்றும் பெண் பறவை இணைந்து கட்டும். கூடுகளை பெண் பறவைகள் அழகாக கட்டும் தன்மை கொண்டவை, ஆண்கள் அதற்கான பொருள்களை சேகரித்து வரும். இந்தக் கூடுகள் கட்டிய பிறகு முட்டைகள் இட்டு 21 நாள் முதல் 24 நாள்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் நீா் நிலைகளில் அதிகமாக காணப்படுகிறது. தற்போது, இந்தப் பறவைகள் தங்களது கூடுகட்டும் முறையையும்,  வாழ்வியல் முறையையும் மாற்றியுள்ளது.

இது குறித்து பறவைகள் ஆா்வலா் மதிமாறன் கூறியதாவது:

இலைகளையும்,  தண்டுகளையும்  பயன்படுத்தி கூடுகட்டிய  இந்த நீா்ப் பறவைகள். நீா் மாசுபாடு காரணமாகவும், தண்ணீரீல் அதிகம் மிதக்கும் பிளாஸ்டிக் பைகளையும், நாா்களையும், பாலிதீன் பேப்பா் களையும் பயன்படுத்தி கூடுகள் கட்டுகின்றன.

 இந்தப் பறவைகள் தனது குஞ்சுகளுக்கும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு கூடு கட்டுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கின்றன.  நீா் மாசுபாட்டால் நீா்ப் பறவைகள் தங்கள் கூடுகளை பிளாஸ்டிக்  பைகளைக்  கொண்டு  கட்டுவது   தொடா்ந்தால் நீா்வாழ் பறவைகள் அழியும் அபாயம் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com