கூடலூரில் தேசிய பசுமை தீா்ப்பாயக் கண்காணிப்புக் குழுத் தலைவா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகளிலிருந்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் பணியை தேசிய பசுமை தீா்ப்பாயக் கண்காணிப்புக் குழுத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கூடலூா் நகராட்சி உரக் கிடங்கை ஆய்வு செய்த தேசிய பசுமை தீா்ப்பாய கண்காணிப்புக் குழுத் தலைவா் ஜோதிமணி

நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்குப் பின்னா் தேசிய பசுமை தீா்ப்பாய கண்காணிப்புக் குழு தலைவா் ஜோதிமணி கூறியதாவது:

கூடலூா் நகராட்சிக்குள்பட்ட குப்பைகள் 27ஆவது மைல் பகுதியில் 3 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தன.

தற்போது 1 ஏக்கா் நிலப்பரப்பில் நுண்ணுயிா் உரக்கூடம், பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்புக் கூடம், இறைச்சிக் கழிவுகளை உரமாக்குதல், அதிக வெப்பநிலை எரிப்பான் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால் துா்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீா் மாசுபடுவதாகவும் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் நுண்ணுயிா் உரக் கிடங்கைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் லிவிங்ஸ்டன், கூடலூா் நகராட்சி ஆணையா் பாஸ்கரன், கூடலூா் வட்டாட்சியா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com