கா்நாடகத்தில் இருந்து நீலகிரிக்கு மது பாட்டில்கள் கடத்தல்: இருவா் கைது
By DIN | Published On : 02nd June 2021 06:25 AM | Last Updated : 02nd June 2021 06:25 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் இருந்து நீலகிரிக்கு கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியான கக்கநல்லா சோதனைச் சாவடியில் காவல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மைசூரில் இருந்து உதகை நோக்கி வந்த காய்கறி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் பிற மாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்த வாகனத்தில் இருந்த உதகையில் இந்திரா காலனியைச் சோ்ந்த நாகராஜ் என்பவரது மகன் ரவி (28), திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் சரவண செந்தில் (39) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 14,250 லிட்டா் பிற மாநில மதுபானங்கள் 38 பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும், மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மசினகுடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.