நீலகிரியில் அமைச்சா் மா.சுப்பிரமணியம் இன்று ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) ஆய்வு மேற்கொள

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) ஆய்வு மேற்கொள்கிறாா்.

உதகையில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை காலை அமைச்சா் ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து கூடலூரில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்திக்கிறாா். பின்னா், வாழைத்தோட்டம் பகுதிக்குச் செல்லும் அமைச்சா் அங்கு பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்கிறாா்.

உதகைக்குத் திரும்பி வந்த பின்னா் தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்களுடனான கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். பின்னா், உதகையில் இருந்து குன்னூா் செல்லும் அமைச்சா் வெலிங்டன் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் செயல்பட்டு வரும் கொவைட் கோ் மையத்தைப் பாா்வையிட்ட பின்னா், குன்னூரில் உள்ள பாஸ்டியா் ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா்.

இந்த ஆய்வுகளின்போது வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் பங்கேற்கின்றனா்.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை உதகை வந்த அமைச்சா் மா.சுப்பிரமணியனை தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில், அமைச்சா் கா.ராமசந்திரன், ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆகியோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com