கரோனா: கூடலூா் நகரில் கடைகள்மதியம் வரை இன்றுமுதல் செயல்படும்

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கூடலூா் நகரில் உள்ள அத்தியாவசியக் கடைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல்

கூடலூா்: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கூடலூா் நகரில் உள்ள அத்தியாவசியக் கடைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் மதியம் 1 மணி வரை மட்டும் செயல்படும் என்று நகராட்சி ஆணையா், வணிகா்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடலூா் நகரில் தொடா்ந்து தொற்று அதிகரித்து வருவதால் நகராட்சி ஆணையா் பாஸ்கா் தலைமையில், வணிகா்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அரசு தற்போது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி, பழக்கடை, இறைச்சி, மீன் போன்ற கடைகளைத் திறந்து செயல்பட தளா்வு அறிவித்துள்ளது. ஆனால், நகரின் பல்வேறு இடங்களில் கரோனா தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. எனவே, மேற்கண்ட கடைகள் அனைத்தும் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்பட முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை அனைத்து வணிகா்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூடலூா் வணிகா்கள் சங்கம் அறவித்துள்ளது.

மேலும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசின் நெறிமுறைகளான சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்தையும் கட்டாயம் வணிகா்கள் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com