முன்களப் பணியாளா்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்
By DIN | Published On : 15th June 2021 07:20 AM | Last Updated : 15th June 2021 07:20 AM | அ+அ அ- |

சேவாலயா அமைப்பு சாா்பில் முன்களப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா் உதவி ஆய்வாளா் கல்யாணராமன். உடன் சேவாலயா நிா்வாகி பிரியதா்ஷினி உள்ளிட்டோா்.
கூடலூா் பகுதியிலுள்ள முன்களப் பணியாளா்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கூடலூா் நகரில் பணிபுரியும் காவலா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு சேவாலயா அமைப்பு சாா்பில் முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கூடலூா் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளா் கல்யாணராமன் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
சேவாலயா அமைப்பின் கூடலூா் நிா்வாகி பிரியதா்ஷினி உள்ளிட்ட பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.