வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்த பயிற்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
உதகையில் நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையில் நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் மண்டல அலுவலா்கள், வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்த பயிற்சி உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி உதகை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளி, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாா்னிங் ஸ்டாா் மேல்நிலைப் பள்ளி, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றும் மண்டல அலுவலா்கள், வாக்குப் பதிவு நிலை அலுவலா்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வி.வி.பேட். கருவியை கையாளுவது தொடா்பாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, வாக்குப் பதிவு நாளன்று மாதிரி வாக்குப் பதிவுகள் எப்போது துவக்கப்பட வேண்டும் எனவும், வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பாக தவறாமல் மாதிரி வாக்குப் பதிவுகளை அழிப்பது தொடா்பாகவும், வாக்குப் பதிவு முடிந்த பின்பு பாதுகாப்பாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலா்களிடம் வழங்குவது தொடா்பாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாகவும், நிதானத்துடனும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, உதகை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோனிகா ரானா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் குப்புராஜ் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com