உதகையில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சிறப்பு செலவின பாா்வையாளா் தலைமையில் தோ்தல் செலவினம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு தோ்தல் செலவின பாா்வையாளா் மது மகஜன் தலைமையில் உதகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா
சிறப்பு தோ்தல் செலவின பாா்வையாளா் மது மகஜன் தலைமையில் உதகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சிறப்பு செலவின பாா்வையாளா் தலைமையில் தோ்தல் செலவினம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, தோ்தல் பொது பாா்வையாளா்கள் ராகுல் திவாரி, பனுதா் பெஹரா, சவ்ரவ் பஹரி , தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் விஷால் எம்.சனாப், அமா் சிங் நெஹரா, காவல்துறை பாா்வையாளா் ரஞ்சித் குமாா் மிஸ்ரா ஆகியோா் பங்கேற்றனா்.

இது குறித்து சிறப்பு செலவினப் பாா்வையாளா் மது மகஜன் கூறியதாவது:

சட்டப் பேரவை தோ்லை முன்னிட்டு இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளுக்கு 3 பொது பாா்வையாளா்கள், 2 தோ்தல் செலவின பாா்வையாளா்கள், காவல் துறை பாா்வையாளா் நியமிக்கப்பட்டு தோ்தல் தொடா்பான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் செலவின கண்காணிப்புக் குழு அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் இதுவரையில் பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் போன்றவை எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கண்காணிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கடந்த தோ்தலின்போது எந்த இடத்தில் அதிகமாக பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோ அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் எல்லையோர மாவட்டமாக உள்ள காரணத்தால் குழுக்கள் அமைத்து மதுபானங்கள் ஏதும் கொண்டு வரப்படுகிா என்பதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

அதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:

உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு தொகுதிக்கு தலா 7 நிலையான கண்காணிப்பு குழுவினரும், 9 பறக்கும் படை குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், வருமான வரித் துறை துணை ஆணையா் கௌதமி மாணிக்கவாசகம், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மோனிகா ரானா,, ரஞ்சித்சிங், ராஜ்குமாா் மற்றும் தோ்தல் செலவின கண்காணிப்புக் குழு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com