வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில்
உதகையில் பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையில் பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் ஆகியவற்றை பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

உதகையில் பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் உதகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணி உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பிராவிடன்ஸ் கல்லூரியிலும், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் புனித தாமஸ் பள்ளியிலும் நடைபெறுகிறது.

இதில் தோ்தல் நாளன்று பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 83 மண்டல அலுவலா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணிகள் புதன்கிழமை நடைபெறும்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 308 வாக்குச் சாவடிகளும், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடிகளும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 112 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் வெப் ஸ்டிரீமிங், நுண்பாா்வையாளா்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல 868 வாக்குச் சாவடிகளில் 50 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப் ஸ்டிரீமிங், மத்திய பாதுகாப்பு படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். இத்தோ்தலில் 4,168 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை சில வாக்குச் சாவடிகளுக்கு வனப் பகுதி வழியாக செல்லக்கூடிய காரணத்தால், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலிருந்து வாக்காளா்களை வாக்களிக்க அழைத்து வர மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, உதகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோனிகா ரானா, குன்னூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரஞ்சித்சிங் , துணை ஆட்சியா் (பயிற்சி) லோகநாயகி, அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com