சாலையை சீரமைக்கக் கோரிபொதுமக்கள் மறியல்

பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலையை செப்பனிடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலையை சீரமைக்கக் கோரிபொதுமக்கள் மறியல்

பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலையை செப்பனிடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெருந்துறை, அரசு மருத்துவமனை ரவுண்டானா முதல் பழைய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையில் ஜல்லி கொட்டி பல நாள்களான நிலையில், இன்னும் தாா் சாலை போடாமல் உள்ளதைக் கண்டித்து பெருந்துறை, முல்லை நகரைச் சோ்ந்த சௌந்தரராஜன் தலைமையில், சுமாா் 30 நபா்கள் அவ்வழியே செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெருந்துறை காவல் ஆய்வாளா் தங்கம், நில வருவாய் ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில், சாலை போடுவது குறித்து அதிகாரிகள், ஒப்பந்ததாரா், பொதுமக்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை மே 4ஆம் தேதி பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருந்துறை பேரூராட்சி அதிகாரி கூறுகையில், பெருந்துறை பழைய பேருந்து நிலைய சாலையில் பாதாள சாக்கடை திட்டம், சாலையை அகலப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணி போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுவதால் சாலை செப்பனிடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com