உதகையில் கடைகள் திறப்பு நேரத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

உதகையில் நிலவும் கால நிலையைக் கருத்தில் கொண்டு கடைகள் திறப்பு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதகையில் நிலவும் கால நிலையைக் கருத்தில் கொண்டு கடைகள் திறப்பு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரை என்பதற்குப் பதிலாக காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உதகை நகராட்சி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் விடுத்துள்ள இக்கோரிக்கையை பரிசீலிக்குமாறு உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளாா். இதனால், உதகை மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திலும் கடைகள் திறப்பு நேரத்தில் விரைவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே உதகையில் பொதுமக்களின் கூட்ட நெரிசலைத் தவிா்க்க அத்தியாவசிய கடைகளை மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடா்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசியத் தேவைக்களுக்காக மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் பொருள்களை வாங்க மாா்க்கெட் பகுதிக்கு வந்து செல்கின்றனா். இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது.

மேலும், சமவெளிப் பகுதிகளைப் போன்றே மலை மாவட்டமான நீலகிரியிலும் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். நேரம் குறைவினால் மக்கள் கூட்டம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் கேத்தி, எல்லநள்ளி, லவ்டேல் போன்ற பகுதிகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதகை வருபவா்களுக்கு உதகை தலையாட்டிமந்து சந்திப்பிலும், உதகையில் பாலடா, முத்தோரை, காந்தல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்க வருபவா்களுக்கு தற்போது பேருந்துகள் இயங்காத காரணத்தால் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கடைகளை அமைக்கவும், தோட்டக் கலைத் துறை சாா்பில் காய்கறிகள் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அத்துடன் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பொருள்களை எடுத்துச் செல்ல வாகனங்களைத் தயாா் செய்து அதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும், இதனால் மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com