நீலகிரியில் 1.73 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் 1.73 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 1.73 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி உதகையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 57,233 பேருக்கு கரோனா சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் கரோனா தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 81 சதவீதமாக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள், இணை நோயாளிகள், பொதுமக்கள் என இதுவரை 1 லட்சத்து 73,432க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில், மருத்துவப் பணியாளா்கள் 5,054 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 13,356 பேருக்கும், இரண்டாவது நிலை தடுப்பூசியாக 46,926 பேருக்கும், 18 முதல் 44 வயதுடையவா்களில் 8,107 பேருக்கும், பொதுமக்களில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 99,967 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com