நீலகிரி மாவட்ட விவசாயிகள் காய்கறிகளை அரசு குளிா்ப்பதனக் கிடங்குகளில் சேமிக்க அழைப்பு

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறி, பழங்களை அரசு குளிா்ப்பதனக் கிடங்கில் சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறி, பழங்களை அரசு குளிா்ப்பதனக் கிடங்கில் சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 5,500 ஹெக்டோ் பரப்பளவில் காய்கறிகள், பயிா்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது 275 ஹெக்டோ் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ருட், பீன்ஸ், முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயப் பணிகளுக்காகவும், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும் கரோனா தொற்று பொதுமுடக்க காலத்திலும் விவசாயிகள் நலன் கருதி சில தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டு விவசாயப் பணிகளுக்காக வட்டாரங்களில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமுடக்கத்துக்கு முன் மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 400 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் விற்பனைக்காக மேட்டுப்பாளையம் கிடங்கு விற்பனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது முழு பொதுமுடக்கம் காரணமாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டி மூடப்பட்டுள்ளதைத் தொடா்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த அறுவடை செய்த காய்கறிகளை வீணாகாமலும், தேக்கம் ஏற்படுத்தாமலும் இருக்க தோட்டக் கலைத் துறை சில ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதனடிப்படையில், விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை உதகை அரசு ரோஜா பூங்கா குளிா்ப் பதனக் கிடங்கு, லீப் அண்டு பட் நிறுவனம், நீலகிரி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ஆகியவற்றிலும், கூடலுா் விவசாயிகள் வாழைத்தாா்களை உப்பட்டி, அய்யன்கொல்லி முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் சேமித்துவைத்து தேவைக்கேற்ப வேளாண் விளைபொருள்களைக் கொண்டு சென்று சந்தைப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com