நீலகிரியில் தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவா்கள் நியமனம்: ஆட்சியா் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், கரோனா மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்துக்குப் பணிபுரிய மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், கரோனா மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்துக்குப் பணிபுரிய மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பரவல் காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், கரோனா மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்துக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி வரை பணிபுரிய சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மூலம் பொது மருத்துவா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். மேலும் தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும்.

அதன்படி, பொது மருத்துவா் எம்.பி.பி.எஸ். என்ற கல்வித் தகுதியில் ரூ. 60,000 மாதாந்திர தொகுப்பூதிய அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்காக கல்வித் தகுதி சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவா்களுக்கான மருத்துவக் கவுன்சில் பதிவு, பாஸ்போா்ட் அளவிலான ஒரு புகைப்படம் ஆகியவற்றை விருப்பமுள்ள நபா்கள் துணை இயக்குநா், சுகாதாரப் பணிகள் அலுவலகம், சிடி ஸ்கேன் மையம் அருகில், உதகை - 643001 என்ற முகவரியில் தங்களது அசல் சான்றிதழ்கள், உரிய ஆவணங்களுடன் உடனடியாக அணுகலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 89032-16454 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com