புலியைத் தேடும் பணியில் முன்னேற்றமில்லை

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலியை தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிங்காரா வனப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
சிங்காரா வனப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலியை தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனத்தில் புலி பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, சிங்காரா வனத்தை கட்டுப்பாட்டில் எடுத்த வனத் துறையினா் ஒரு மாட்டை கட்டிவைத்து மரத்தில் மீது பரண் அமைத்து புலியை கண்காணித்து வந்தனா். ஆனால், புலி அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

அடிக்கடி இடத்தை மாற்றுவதால் புலியின் இருப்பிடத்தை அறிய முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா். இந்தப் புலி 4 மனித உயிா்களையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமை முதன்மை வனப் பாதுகாவலா் சேகா்குமாா் நீரஜ், புலியின் நடமாட்டத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் வனத் துறை தங்களது யுக்திகளை மாற்றியமைத்து வருகிறது. புலிக்கும், தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாமல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

புலியை உயிருடன் பிடிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் தயாா் நிலையில் வைத்துள்ளனா். தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் புலியை கண்காணித்து அதன் நடமாட்டத்துக்கு ஏற்றவாறு சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com